மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
X
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் ( 49). இவர் ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் திங்கட்கிழமை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணியை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை 3 பேர் கொண்ட ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்க்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர் மயிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி