விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறு
விழுப்புரம் மாவட்டத்துடன் கள்ளகுறிச்சியும் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, மாவட்டத்தில் ஒரு மாவட்ட பஞ்சாயத்து சேர்மன், 22 ஒன்றிய சேர்மன், 15 பேரூராட்சி தலைவர்,3 நகராட்சி தலைவர், 1104 ஊராட்சி தலைவர்கள் என பெரிய மாவட்டமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தது,
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமானது, அதன் பின்னர் தற்போது தமிழகத்தில் புதிதாக உதயமான மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன,
விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்டங்கள்,13 ஊராட்சி ஒன்றியங்கள்,2 நகராட்சிகள்,8 பேரூராட்சிகள்,688 ஊராட்சிகள் உள்ளடக்கியது, மாவட்ட மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு படி 20 லட்சத்து,85 ஆயிரத்து,790, அதில் தற்போதைய வாக்காளர்கள் 13 லட்சத்து,83 ஆயிரத்து,687 பேர், அதில் ஆண்கள் 6 லட்சத்து,87 ஆயிரத்து,420 பேர், பெண்கள் 6 லட்சத்து 9 6ஆயிரத்து115 பேரர் மற்றவர்கள் 152 ஆகும்,
பேரூராட்சி, நகராட்சி தவிர்த்து மற்ற இடங்களுக்கு தேர்தல் பணி நடைபெற்று வருகிறது, மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6,9 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது, தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை கடந்த 15ந்தாம் தேதி முதல் சம்மந்தப்பட்ட அலுவலங்களில் கொடுத்து வருகின்றனர், மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கான இடம் பொதுவாகவும்,13 ஒன்றிய தலைவருக்கான இடங்களில் 2 பட்டியல் இன பெண்களுக்கும்,3 பட்டியல் இன பொதுவிற்கும்,4 பொதுபிரிவு பெண்களுக்கும்,4 பொதுபிரிவு என இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu