/* */

விசிக விழுப்புரத்தில் தேர்தல் அறிக்கை வெளியீடு

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைவர் தொல் .திருமா வெளியிட்டார்

HIGHLIGHTS

விசிக விழுப்புரத்தில் தேர்தல் அறிக்கை வெளியீடு
X

விழுப்புரம் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த விடுதலை சிறுத்தை கடாசியின் தலைவர் தொல்.திருமாவளவன்அக்கட்சியின் 15 தலைப்புகளில் 42 பக்கம் கொண்டதேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தலித்துகள், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் தீய உள்நோக்கோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் தனியார்மயப்படுத்துதல் போன்ற அனைத்து வகையான சதிமுயற்சிகளையும் முறியடித்து சமூகநீதியைப் பாதுகாப்போம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்கால கனவுத் திட்டமான இந்துராஷ்டிரத்தை அமைக்க பெருந்தடையாக உள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல நீர்த்துப்போக செய்யும் பாஜகவின் சூது, சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம். அதற்காக அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகள் கைகோர்த்துப் போராடுவோம்.

ஏகாதிபத்திய, சார்பு பொருளாதாரக் கொள்கைகளையும் அதனடிப்படையிலான தனியார்மயமாதல் அல்லது கார்ப்பரேட்மயமாதலையும் தடுத்துநிறுத்த தொடர்ந்து மக்களை அரசியல்படுத்துவோம்.

மொழிவழி தேசியம், மாநில உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாத்துஅரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம்.

மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிப்படுத்த குறிப்பாக, சட்டம் இயற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளோடு ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம்.

சாதியின் பெயரால் மற்றும் மதத்தின் பெயரால் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும் அதனடிப்படையிலான சமூகப்பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணியப்படுத்துவோம்.

முற்போக்கு ஜனநாயக சக்திகளைத் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராக ஏவப்படும் அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடுவோம்.

ஒரே தேசம் - ஒரே கல்வி' என்னும் அடிப்படையில், தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் 'ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம்' என்னும் சங்பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாஜக மேற்கொள்ளும் பாசிச முயற்சிகளை மக்கள் துணையுடன் முறியடிப்போம். மாநில அரசுகளே கல்விக் கொள்கையை வரையறுக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய தொடர்ந்து களமாடுவோம்.

விவசாயம், தொழில் வளம், வணிகம் போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்மயமாக்கி, சிறு-குறு நடுத்தர விவசாயிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகிய அனைவரையும் வலுவிழக்கச் செய்யும் வகையில் செயல்படும் பாஜகவின் துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பாஜக அரசு கொணர்ந்துள்ள வெகுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை பாட்டாளி மக்களின் பேராதரவோடு தூக்கி எறிவோம்.

நீர், நிலம், காற்று ஆகியவற்றை நஞ்சாக்கிப் பாழ்ப்படுத்தும் வகையிலான ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடி, விவசாயம், குடிநீர் போன்றவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குரிய வாழ்வாதரங்களான சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.

பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் பாதுகாத்திட தொடர்ந்து பாடுபடுவோம்.

கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கட்டணமின்றி வழங்கிடவும் மற்ற இலவச திட்டங்களை முற்றாக ஒழித்திடவும் வலியுறுத்திப் போராட மக்களிடையே விழிப்புணர்வை வளர்த்தெடுப்போம். மதுவிலக்கை தேசிய கொள்கையாக வளர்த்தெடுக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம். என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் விசிக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 25 March 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?