பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரத்தில் பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சசிகுமார், அவரது மனைவி கோகிலா ஆகியோர் வழக்கறிஞர்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ந்தேதி இவர்களுக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமு என்ற ராமதாஸ் என்பவருக்கும் வழிப்பாதை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது,

இந்நிலையில் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ராமு சசிக்குமார் தரப்பினர் மீது புகார் கொடுத்துள்ளார், இதனையடுத்து போலீசார் வழக்கறிஞர்கள் சசிகுமார் அவரது மனைவி கோகிலா ஆகியோர் மீது 307 கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதனை கண்டித்தும் உடனடியாக வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பல்வேறு நிலை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர், பின்னர் உடனடியாக வழக்கை போலீசார் வாபஸ் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!