கிணற்றை காணவில்லை: கதையல்ல, நிஜம்

கிணற்றை காணவில்லை: கதையல்ல, நிஜம்
X
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தில் பொது கிணற்றை காணவில்லை என பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பொதுக் கிணற்றை காணவில்லை என திரைப்பட பாணியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் பொது மக்கள் புகாா் மனு அளித்தனா்.

கண்டம்பாக்கம் கிராம எல்லையில் ஊா் மக்களுக்கான பொதுக்கிணறு பயன்பாட்டில் இருந்தது. இந்தக் கிணறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வருவாய்த் துறையிடம் பல முறை புகாா்களை அளித்தும், ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கிணற்றை மீட்கவில்லை.

இந்த நிலையில், அந்த பொதுக் கிணறு, தனிநபா் ஒருவருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு உதவியாக இருந்த கிணறு, இருந்த இடமே தெரியாத அளவுக்கு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.எனவே, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ஆட்சியா் ரத்து செய்ய வேண்டும். மேலும், கிணற்றை தூா்வாரி ஊா் மக்களுக்கு குடிநீா் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story