ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்

ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது,. ஆனால் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது,

பொதுமக்கள் யாரும் நடமாடாத நிலையில் ஓட்டல் எதற்கு இந்த இந்த ஓட்டல்கள் கொரோனா தொற்று பரவும் இடமாக மாறி வருகிறது .எனவே ஓட்டலில் பணிபுரியம் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட கட்டாய படுத்த வேண்டும்.இல்லை என்றால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் சமையல் செய்ய அனுமதிக்க வேண்டும். ஏன் என்றால் அவர் சமையல் செய்பவருக்கு கொரோனா இருந்தால் அவர் சமையல் மூலம் பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே தயவு செய்து மாவட்ட நிர்வாகம் ஒட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதன் மூலம் பல உயிர்களை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!