வாக்கு பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு

வாக்கு பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு
X
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 ந்தேதி 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இந்த தேர்தலில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 78.21 சதவீத வாக்குகளும், மயிலம் தொகுதியில் 79.05 சதவீத வாக்குகளும், திண்டிவனம் தொகுதியில் 78.33 சதவீத வாக்குகளும், வானூர் தொகுதியில் 79.22 சதவீத வாக்குகளும், விழுப்புரம் தொகுதியில் 76.94 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 76.24 சதவீத வாக்குகளும் பதிவானது. இதன் மொத்த வாக்குப்பதிவு 78.49 சதவீதமாகும்.

செஞ்சி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான செஞ்சி மேல்களவாயில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரியிலும்,

மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியிலும்,

வானூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான வானூர் ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை அறிவியல் கல்லூரியிலும்,

விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும்,

திருக்கோவிலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அதன் வாக்கு எண்ணும் மையமான கண்டாச்சிபுரம் எஸ்.கொல்லூரில் உள்ள வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!