செஞ்சி வனப்பகுதியில் 27 நாட்டு வெடிகளுடன் இளைஞர் கைது

Police Arrest | Villupuram News
X
Police Arrest- செஞ்சி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Police Arrest- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில்,வனசரக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக அங்குநின்றிருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, மேல்வில்லிவலத்தை சேர்ந்த சதீஷ், (வயது20)என்பதும், அவர் கையில் வைத்திருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, செஞ்சி வன சரக காவலர்கள் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்து, சிறையில்அடைத்தனர். மேலும் 27 வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது