100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு

100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு
X

செஞ்சி அருகே நூறு நாள் வேலையின்போது உயிரிழந்த பெண்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் அகலூர் பகுதியில் நடைபெற்ற 100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அவியூர் மதுரா அகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன், இவரது மனைவி வசந்தா. இன்று சனிக்கிழமை அந்த பகுதி ஏரி மதகு வாய்க்காலில் நடைபெற்ற 100 நாள் வேலையில் இவரும் வேலை செய்துள்ளார், அப்போது அங்கு கல் தடுக்கி அவர் கீழே விழுந்து உள்ளார். உடனடியாக உடன் வேலை செய்தவர்கள் அவரை அங்கிருந்த வாகனத்தில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலை தளத்தில் பெண் கல் தடுக்கி விழுந்ததில் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க 100 நாள் வேலை தளத்தில் அவசர கால மருத்துவ உதவி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil