குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததால் பரபரப்பு

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததால் பரபரப்பு
X

பூச்சிமருந்து கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மினி குடிநீர் டேங்கில் பூச்சி மருந்து கலந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கம்மந்தூா் ஊராட்சி கூட்டு ரோட்டில் உள்ள குடிநீா்த் தொட்டியிலிருந்து மொடையூா் கிராம மக்கள் தண்ணீா் பிடித்து வந்தனா். சிலமாதங்களுக்கு முன்பு இந்த குடிநீா்த் தொட்டியில் மர்ம நபர்கள் நாய்க் குட்டியை போட்டிருந்தனா். சில நாள்கள் கழித்து மின் மோட்டாா் திருடப்பட்டிருந்தது. பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா் புதிய மின் மோட்டாரை பொருத்தினாா். இந்நிலையில், பூச்சிக் கொல்லி மருந்தை குடிநீா்த் தொட்டியில் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
smart agriculture iot ai