மழை பெய்தால் குளமாகும் செஞ்சி பேருந்து நிலையம்: இது அமைச்சர் தொகுதிங்க

மழை பெய்தால் குளமாகும் செஞ்சி பேருந்து நிலையம்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேருந்து நிலைய பகுதியில் எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் பேருந்து நிலையத்தின் உள்ளே மழைநீர் வெளியேற வழி இருந்தும் ஆக்ரமிப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாக அங்கேயே தேங்கி குளமாகி பல நாட்கள் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும்
வெறும் மழைநீர் மட்டும் இல்லைங்க, அதனுடன் கழிவுநீர் கலந்து கழிவுநீர் குளமாக காட்சி அளிக்கும், அந்த நீர் தானாக வடியும் வரை பேருந்து நிலைய பகுதிக்கு வருவோர், போவோர் மூக்கை பொத்திக்கொண்டு வந்து செல்ல வேண்டும்.
கழிவு நீரில் நடப்பதால் நோயை வாங்கிக்கொள்ளும் இந்த அவலநிலை, பல ஆண்டுகளாக தொடரும் தொடர் கதை என்பது ஊரறிந்த விசயம். இதனால் பொதுமக்களும், பேருந்து ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அதேபோல் காந்தி பஜாரில் உள்ள தெருக்களிலும் தண்ணீர் சீராக செல்லாததால் குளம் போல் காட்சி அளிக்கிறது.
பருவ மழை தொடங்குவதற்கு முன்பு உடனடியாக தொகுதி அமைச்சர் சம்மந்தப்பட்ட துறையை முடுக்கி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை நோயின் பிடியில் இருந்து காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu