செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு
X
தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி செஞ்சி அருகே உள்ள அவியூர் மதுரா விற்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியம், அவியூர் ஊராட்சியை சேர்ந்தது விற்பட்டு கிராமம், இக்கிராமத்தை மக்கள் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி பதவிகளுக்கு வர முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, அதனால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி கடந்த 22 ந்தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விரைந்து வந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் சமாதானம் அடையாத அக்கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீடு வீடாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களை ஒட்டி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது, இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் நெடி, தொரவி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் முறையாக இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வாய்ப்பு அதிகரித்து வருகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!