விழுப்புரம் மாவட்டம்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்

விழுப்புரம் மாவட்டம்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்
X

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடி ஊராட்சியில் வாக்கு போட வந்த முதியவர். 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6 ந்தேதி முதற்கட்ட உள்ளாட்சி வாக்கு பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், வல்லம், மேல்மலையனூா்ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது, 1,379 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 6 லட்சத்து,92ஆயிரத்து,228 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த பணியில் 11 ஆயிரத்து 411வாக்குப் பதிவு அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2ஆயிரத்து 800 பதவிகளுக்கு, 8ஆயிரத்து 955 வேட்பாளர்கள் போட்டி களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture