மேல்மலையனூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுயிட்டு போராட்டம்

மேல்மலையனூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுயிட்டு போராட்டம்
X

மாற்று இடம் கேட்டு போராட்டதில் ஈடுபட்ட கிராம மக்கள் 

மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட செவலப்புரையில் வீடுகள் இடிக்கப்பட்டதால் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரை கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், செவலப்புரை கிராமத்தில் குடியிருப்பு வீடுகளை எட்டு நாட்களுக்கு முன்பு இடித்தனர். இதுவரையிலும் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காததால், பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் அவதிப்படுகிறார்கள்,

சுமார் 85 குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகதால், உடனடியாக மாற்றியிடம் ஏற்பாடு செய்திட வட்டாட்சியரை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்களோடு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் டி.முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!