செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்

செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
X

தனி ஊராட்சி அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராம மக்கள் தனி ஊராட்சி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவித்தபோதே பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தனர், அக்கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்,

இந்நிலையில் இன்று கிராம மக்கள் பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!