வேன் கவிழ்ந்து ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம்
X
செஞ்சி அருகே கொணலூர் என்ற இடத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் அருகே உள்ள கொணலூர் என்ற இடத்தில் உள்ள குல தெய்வத்திற்கு ஆடி பொங்கல் வைக்க வேண்டி விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் அவரது கனகவல்லி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் இன்று காலை சென்று பொங்கல் வைத்தனர்,

பின்னர் பொங்கலை முடித்து வீட்டுக்கு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அந்த டாடா ஏஸ் வாகனம் திடீரென தலை குப்புற கவிழ்ந்தது, இந்த விபத்தில் தனசேகரன் மனைவி கனகவல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக தகவலறிந்த அனந்தபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கரசுப்பரமணியன், தலைமையில் முதன்மை காவலர்கள் மணி, சக்திவேல், மணிகண்டன், ஆகியோர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர், உடனடியாக படுகாயம் அடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

விபத்தில் இறந்த கனகவல்லி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!