மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்

மேல்மலையனூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமில்
X

மேல்மலையனுரில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மஸ்தான் 

மேல்மலையனூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது,

அந்த முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் த.மோகன், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மனி, துணை சேர்மன் விஜியலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா