செஞ்சி அருகே பாழடைந்த சுகாதார நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தல்

செஞ்சி அருகே பாழடைந்த சுகாதார நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தல்
X

மேல்சேவூரில் பாழடைந்து வரும் சுகாதார நிலைய கட்டிடம்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியம் மேல் சேவூரில் பாழடைந்த சுகாதார நிலையத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மேல்சேவூரில் பாழடைந்து வரும் சுகாதார நிலைய கட்டிடம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சேவூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் மேல்சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கல்லேரி, கல்லாங்குளம், செங்கமேடு உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவது, பிரசவம் மற்றும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப் பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பாழடைந்த கட்டிடம் போல காட்சி அளிக்கிறது. இங்குள்ள வளாகத்தில் பாம்பு, பூரான், தேள் போன்ற விச உயிரிகளின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதாகவும் சில நேரங்களில் இவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாகவும் இங்கு வரும் நோயாளிகள் புகார் தொிவிக்கின்றனர்.

இந்த துணை சுகாதார நிலையத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் மற்றும் முதல் உதவி சிகிச்சை மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவிலான நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் 7 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கீழ்மாம்பட்டு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கோ அல்லது 18 கிலோ மீட்டர் தொலையில் உள்ள செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அப்படி செல்லும் போது சிலர் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை பராமரித்து அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் துணை சுகாதார வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது