செஞ்சியில் முன்னறிவிப்பின்றி நடக்கும் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு

செஞ்சியில் முன்னறிவிப்பின்றி நடக்கும் சாலை பணியால் போக்குவரத்து பாதிப்பு
X

திடீர் என நடந்து வரும் சாலைப்பணிகளால் செஞ்சியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் முன்னறிவிப்பின்றி சாலை பணி திடீரென நடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் அடுத்த வாரம் திருவண்ணாமலை பகுதிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செஞ்சி வழியாக சாலை மார்க்கமாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வித முன் அறிவிப்புகளும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பகுதிளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products