புகையிலை பதுக்கி வைத்த இரண்டு கடைகளுக்கு சீல்

Tobacco Products | Shop Seal
X

பைல் படம்.

Tobacco Products -சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு வருவாய் துறை சீல் வைத்தனர்.

Tobacco Products -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, சத்தியமங்கலம் போலீசார் மற்றும் செஞ்சி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நல்லாண் பிள்ளைபெற்றால் கிராமத்தில் உள்ள குமார் (வயது 48) என்பவரது கடையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று, பெரியாமூரில் சுமதி என்பவரது பெட்டிக்கடையில் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?