செஞ்சி அருகே தனியார் சொகுசு பஸ்சில் குட்கா கடத்தி வந்த இருவர் கைது

செஞ்சி அருகே தனியார் சொகுசு பஸ்சில் குட்கா கடத்தி வந்த இருவர் கைது
X

குட்கா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கிளீனர்.

செஞ்சி அருகே தனியார் பேருந்தில் குட்கா கடத்தி வந்த டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கடலாடி குளம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி. மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கடலாடி குளம் பஸ் டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு சொகுசு தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மூட்டைகளில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பஸ் டிரைவர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த மூர்த்தி (வயது 60), கிளீனர் அரூர் வேப்பம்பட்டி முனுசாமி (47) ஆகியோரை கைது செய்து, பஸ்சையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products