தரைபாலத்தில் வெள்ளம்: 10 கிராமம் துண்டிப்பு

தரைபாலத்தில் வெள்ளம்: 10 கிராமம் துண்டிப்பு
X

வராக நதி தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 

மேல்மலையனூர் அருகே தரைபாலத்தில் வெள்ளம் காரணமாக ,10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, இதனால் ஏரி, குளங்கள், வேகமாக நிரம்பி வருகின்றன, இந்நிலையில் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது,

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் செல்லும் சாலையில் வராக நதியின் குறுக்கே உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால்,மேலச்சேரி வழியாக வடபாலை, தாதிகுளம், ஏம்பலம் ,செவலபுரை, தாதன்குப்பம்,ஈயக்குணம், மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture