செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை
X

சேதமடைந்து காணப்படும் செஞ்சி கோட்டைக்கு செல்லும் சாலை

செஞ்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜா தேசிங்கு கோட்டைக்கு செல்லும் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு கோட்டைக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ளது ராஜா தேசிங்கு கோட்டை, இது இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த கோட்டைகளில் செஞ்சிக்கோட்டையும் ஒன்று. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகும்.

இன்று வரை காண்போரை கவரும் வகையில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் எடுத்துள்ள கணக்குப்படி இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்த இடங்களில் 5-வது இடமாக செஞ்சிக்கோட்டை விளங்குகிறது.

அத்தகைய பெருமை வாய்ந்த செஞ்சி கோட்டைக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள கோடையின் நுழைவு வாயிலில் இருந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் அவதிபடுகின்றனர்.

கோட்டையின் உள்பகுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை செல்லும் பாதையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி, சாலையும் சேதமடைந்து கிடக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி கோட்டையை பார்வையிட வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி கோட்டைக்கு சாலை அமைத்து கொடுப்பதுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொல்லியல் துறையினரும் சாலை அமைக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர். எனவே அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொல்லியல் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பலர் தினமும் செஞ்சி கோட்டைக்கு நடைப்பயிற்சி சென்று வருகின்றனர். கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலுக்கும் சாமி தரிசனம் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். கோட்டையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறி இருப்பதால் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். அதேபோல் இங்கு வரும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறாா்கள். சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தொல்லியல் துறை கண்டு கொள்கிறதா என்று தெரியவில்லை.

ஆகையால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும் கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் குடிநீர், சாலை, நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும், டிக்கட் எடுக்க ஆன்லைன் புக்கிங்கை தவிர்த்து பணம் பெற்று டிக்கட் எடுக்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்களும் கோட்டையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும், கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!