செஞ்சி அரசு கல்லூரியில் வரும் 29,30 தேதிகளில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
பைல் படம்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) இல.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கல்லூரியில் மூன்றாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
அதனை தொடர்ந்து 30-ஆம் தேதி பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். பி.எஸ்.சி. பாடப் பிரிவுக்கு கட்டணம் ரூ.3,080 ஆகும். மற்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ 3,660 ஆகும். மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், அசல், நகல் 2, பள்ளி மாற்று சான்றிதழ் அசல், நகல் 2, சாதிச் சான்றிதழ் அசல், நகல் 2, மாா்பளவு புகைப்படம் 5, வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை நகல் 2 மற்றும் உரிய சோ்க்கை கட்டணத்துடன் வர வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu