தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்

தரைபாலத்தை கைக்குழந்தையுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு உதவிய அமைச்சர்
X

தன்னோட பாதுக்காப்பு வாகனத்தில் குழந்தையுடன் வந்த பெண்ணை ஏற்றி தரைப்பாளத்தை கடக்க உதவிய அமைச்சர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தரைபாலத்தை குழந்தைகளுடன் கடக்க முயன்ற பெண்ணுக்கு அமைச்சர் மஸ்தான் உதவி செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் - அவலூர்பேட்டை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் இன்று முட்டிகால் அளவு வரை தண்ணீர் செல்வதை அமைச்சர் மஸ்தான் சென்று பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது வந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். அதனை பார்த்த அமைச்சர், அவர்களை தடுத்து, உடனடியாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து குழந்தைகள் தின வாழ்த்து கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர்களை தன்னோட பாதுக்காப்பு வாகனத்தில் ஏற்றி தரைப்பாளத்தை கடக்க உதவினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!