செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செஞ்சி வட்டக்குழு சார்பில் மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்டத் தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார், குண்டு ரெட்டியார் சங்க கொடி ஏற்றி வைத்தார். எம்.மேகராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வட்ட செயலாளர் வி.சிவன் வேலை அறிக்கையை வசித்தார்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், கட்சி வட்ட செயலாளர் சகாதேவன், விதொச மேல்மலையனூர் வட்ட செயலாளர் எழில் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.மாநாட்டில் சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வட்டியுடன் அவர்கள் முதலீட்டு பணத்தை திருப்பி தரவேண்டும்,செம்மேடு ராஜஸ்ரீ சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மாநாட்டில் புதிய செஞ்சி வட்டத் தலைவராக கோ.மாதவன், வட்ட செயலாளராக வி.சிவன், வட்ட பொருளாளராக ஜி.சபாபதி ஆகியோர் உட்பட 21 பேர் கொண்ட புதிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செஞ்சி வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu