செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு: அமைச்சர் இயக்கி வைத்தார்

செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு:  அமைச்சர் இயக்கி வைத்தார்
X

சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் இயக்கி வைத்தார்

செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இயக்கி வைத்தார்.

செஞ்சி பேரூராட்சி சார்பில் ரூ 8.50 லட்சம் மதிப்பில் சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் சிங்கவரம் சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணர் கோயில் அருகில் 1.50 லட்சம் மதிப்பிலும், சந்தை தோப்பு பகுதியில் ரூ 1 லட்சம் மதிப்பிலும் சூரிய ஒளியில் இயங்கும் எல்.இ.டி.மின் விளக்கு கம்பங்களை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன், பேரூராட்சி துப்புறவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!