அமைச்சர் மஸ்தான் மகன் செஞ்சி பேரூராட்சி தலைவராக பதவியேற்பு

அமைச்சர் மஸ்தான் மகன் செஞ்சி பேரூராட்சி தலைவராக பதவியேற்பு
X

செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் அலி பதவி ஏற்றார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் அலி பதவி ஏற்றார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் 18 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது, அதனால் அறுதிப் பெரும்பான்மை பெற்ற தி.மு.க. பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தான் மகன் 7வது வார்டில் வெற்றி பெற்ற மொக்தியார் அலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கட்சி மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story