செஞ்சி புதிய அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

செஞ்சி புதிய அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

பைல் படம்.

Admission Open Colleges - செஞ்சி பகுதிக்கு மக்கள் கோரிக்கை ஏற்று புதிய அரசு கலைக்கல்லூரியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கி உள்ளது.

Admission Open Colleges - செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் செஞ்சி பகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் செஞ்சிக்கு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி அருகே இடமும் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது. அதன்படி 2022 - 2023-ம் ஆண்டுக்கு கடந்த 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நேரில் விண்ணப்பிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடமே அரசு கலை அறிவியல் கல்வி கல்லூரியை தொடங்கி நடத்த தனியார் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story