செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
X

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வீடு தேடி சென்று இளைஞர்களை கட்சியில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் க.ஆனந்த் முன்னிலை வகித்தாா். தமிழக சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஆா்.டி.சேகா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் வீடுகளுக்கு அந்தந்தப் பகுதி தி.மு.க. நிா்வாகிகள் நேரடியாகச் சென்று இளைஞா்களை கட்சியில் சோ்ப்பது. கட்சிப் பணிகளை நிா்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ்ச்செல்வன், சேதுநாதன், டாக்டா் மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!