மேல்மலையனூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

மேல்மலையனூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  கட்டுப்பாடுகள்
X

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் 

செஞ்சிஅருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் உதவி ஆணையர் க.ராமு வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கண்டிப்பாக பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும். பொங்கல் வைப்பதற்கு அனுமதி இல்லை. மாவிளக்கு தேங்காய் பூ பழம் மாலை கொண்டு வர அனுமதி இல்லை,

சித்தாங்கு கபால வேடமிட்டு கரகம் எடுத்து வர அனுமதி இல்லை, ஆடு கோழி பலியிட அனுமதி இல்லை, காது குத்துவதற்கு அனுமதியில்லை, திருக்கோவிலில் இரவு தங்குவதற்கும் அனுமதி இல்லை, தொற்று பாதித்த பகுதியில் இருந்து திருக்கோவிலுக்கு வர அனுமதி இல்லை என கூறியுள்ளார்

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!