துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி

துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி
X

அரேபியாவில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணம் வழங்கினார்

செஞ்சி அருகே மேல்மலையனூரில் நடந்த நிகழ்ச்சியில் அரேபியாவில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணம் வழங்கினார்

திண்டிவனம் வட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் சவுதி அரேபியாவில் உயிழந்ததையடுத்து அவருடைய இறப்பு நிவாரணம் மற்றும் பணி நிலுவைத் தொகை ரூ.1,00,15,222/- மதிப்பீட்டிலான காசோலையினை உயிரிழந்தவரின் மனைவியிடம் மேல்மலையனூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பெருமாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!