Begin typing your search above and press return to search.
செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் சார்ந்த மின் கம்பங்கள் சரிசெய்யவில்லை, அதனால் மின்சாரம் தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மருர் கிராமத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை திடிரென வீசிய காற்று மழையால் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் முறிந்து விழுந்தன.
இதுவரையிலும் மின்சாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அதனை சரி செய்யவில்லை, அதனால் சுமார் 40 க்கும் மேற்பட்ட விவசாய நீர் மோட்டார்கள் இயக்கபடாமல் பயிர்கள் கருகி வருகிறது. இது குறித்து மின் துறை அதிகாரிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்.. உடனடியாக உடைந்த மின் கம்பங்களை சரிசெய்து மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.