மினி லாரி கண்ணாடியை உடைத்தவர் மீது போலீசில் புகார்

மினி லாரி கண்ணாடியை உடைத்தவர் மீது போலீசில் புகார்
X

பைல் படம்.

TN Police Complaint - அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர், அவரது லாரி கண்ணாடி உடைத்தவர் மீது புகார் அளித்தார்.

TN Police Complaint -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மினி லாரியை ஓட்டி வந்தார். விழுப்புரம் அருகே ஒலக்கூரை பகுதியில் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த குட்டி (வயது 35) என்பவர் குடிபோதையில் மினி லாரியை நிறுத்தி கமலக்கண்ணனுடன் தகராறில் ஈடுபட்டு மினி லாரி கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து கமலக்கண்ணன் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!