செஞ்சியில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

உள்இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து செஞ்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது,

இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் செஞ்சியில் பேராசிரியர் தீரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
future of ai in retail