செஞ்சியில் பேருந்துகள் கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் அவதி

செஞ்சியில் பேருந்துகள் கண்ட இடங்களில் பேருந்துகளை  நிறுத்துவதால்  பயணிகள் அவதி
X

செஞ்சி பேருந்து நிலையம்

பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளால் கண்ட இடத்தில் பேருந்தை நிறுத்துவதால் பொதுமக்கள், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்

செஞ்சி பேருந்து நிலையம் இடமாற்றத்தால் பேருந்துகள் கண்ட இடங்களில் நிறுத்துவதால் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.இதனால் பயணிகள் அவதி பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள பேருந்து நிலையம் மழை காலங்களில் பெரும் அவதியை தந்து வந்தது, இந்நிலையில் பேருந்து நிலையத்தை ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போட்டனர், பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதனால் பேருந்துகள் வந்து செல்லுவதற்கு பேருந்து நிலையத்தை திண்டிவனம் சாலையில் தற்காலிகமாக ஒரு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து சென்றுகொண்டிருந்தன.

இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பேருந்து நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பே நிலையத்திற்கு பேருந்துகள் வரமுடியாமல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business