மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா

மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரங்களில் பனை விதை நடும் விழா
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட அவலூர்பேட்டை ஏரி உள்ளிட்ட கரையோர பகுதிகளில் பனை மரம் நடும் பணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஏரிக்கரை ஓரப்பகுதிகளில் பனைமர விதை நடு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் ஏரிக் கரை, முருகன் கோயில் மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பனை விதை நடும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் கலந்து கொண்டு ஏரி கரையோர பகுதிகளில் பனை விதை நடவு செய்து,பனை விதை நடவு பணியை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜியலட்சுமி, வட்டாட்சியா் கோவா்த்தனன். கிராம நிா்வாக அலுவலா் சங்க வட்டத் தலைவா் ஆ.காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!