/* */

ஆணவ படுகொலையை தடுக்க, புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மாதர் சங்கம் தீர்மானம்

நாட்டில் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் ஏற்ற வேண்டும் என மாதர் சங்கத்தினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

HIGHLIGHTS

ஆணவ படுகொலையை தடுக்க, புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மாதர் சங்கம்  தீர்மானம்
X

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து இந்தியஜனநாயக மாதர் சங்கத்தின் 16- வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.நீலா தலைமை தாங்கினார்,

முன்னதாக பெண்ணுரிமை கேட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகே இருந்து பெண்ணியம் செயல்பாட்டாளர் பி.பூங்கொடி தலைமையில் தொடங்கிய மாதர் சங்கத்தின் ஊர்வலத்தை திமுக மகளிர் அணி சைத்தானீபீ மஸ்தான் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்,

அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்ணுரிமை கேட்டும், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் மாதர் சங்கத்தினர் ஊர்வலத்தில் கோஷங்களை எழுப்பியவாறு மாநாட்டு திடலுக்கு வந்தடைந்தனர், அங்கு சங்க கொடியை மூத்த தலைவர் கே.வள்ளி ஏற்றி வைத்தனர்.


மறைந்த பாப்பா உமாநாத், ஜானகி அம்மாள் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வட்ட செயலாளர் பி.சங்கீதா, மாவட்ட துணைச்செயலாளர் வி.உமாமகேஸ்வரி, மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுதாய், மாவட்ட பொருளாளர் எஸ்.அமுதா, மாநில துணைத்தலைவர் ஜி.கலைசெல்வி, மாநில துணைச்செயலாளர் எஸ்.கீதா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்,

மாநாட்டின் நிறைவுரையை அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.சுதாசுந்தர்ராமன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினர்,மாநாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,100 நாள் வேலை தொடர்ந்து வழங்கி, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, நகர்புறத்திற்கு அமல்படுத்த வேண்டும், பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சாதிய ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்,கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீ மதி இறப்பின் உண்மை நிலையை கண்டறிந்து நீதி வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

மாநாட்டில் புதிய மாவட்டம் தலைவராக கே.தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளராக வி.உமாமகேஸ்வரி, மாவட்ட பொருளாளராக பி.இலக்கிய லட்சுமி ஆகியோர் உட்பட 15 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர்.முடிவில் வட்ட பொருளாளர் கே.அமுதா நன்றி கூறினார்.

Updated On: 21 July 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை