விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேரூராட்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேரூராட்சி கூட்டம்
X

பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார்.

Council Meeting - செஞ்சி நகரை பசுமை பகுதியாக மாற்றும் நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கு 10 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

Council Meeting -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் சாதாரண மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகுத்தார். கூட்டத்தில் திருக்கோவிலூர் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து செஞ்சிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் கடையம் பகுதியில் நீர் உந்து நிலையம் அமைக்க வேண்டும். செஞ்சி பஸ் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் இயங்கும் தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, கொத்தமங்கலம் ஏரி மற்றும் வழுக்கம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ரூ. 52 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு மற்றும் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.

பல்வேறு இடங்களில் நீர்த்தேக்க தொட்டி சுற்றுச்சுவர், சிமெண்ட்டுசாலை, தார் சாலை அமைப்பது உள்பட ரூ. 5 கோடியே 15 லட்சம் மதிப்பில் 18 வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செஞ்சி நகரை பசுமை பகுதியாக மாற்றும் நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கு 10 மரக்கன்றுகள் வழங்கி நடவு செய்து தருவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்திரா, அஞ்சலை, லட்சுமி, சீனிவாசன், சுமித்ரா, சங்கர், ஜான் பாஷா, அகல்யா, சிவக்குமார், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil