வல்லம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக்கன்று வழங்கிய அமைச்சர்

வல்லம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக்கன்று வழங்கிய அமைச்சர்
X

செஞ்சி தொகுதி வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் மரக்கன்றுகளை வழங்கினார்.

வல்லம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் மரக்கன்றுகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைத்து கிராமத்திலும் மரக்கன்றுகளை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலவேணி, சிவகாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!