செஞ்சியில் உதயநிதி பிறந்தநாள்: அமைச்சர் நல உதவி

செஞ்சியில் உதயநிதி பிறந்தநாள்: அமைச்சர் நல உதவி
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மளிகை பொருட்களை வழங்கிய அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உதயநிதி பிறந்தநாள், அமைச்சர் நல உதவி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600 குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட தொகுப்பினை செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்,

அப்போது மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து உடனிருந்தனர்.

செஞ்சி நகர மன்ற உதயநிதி ரசிகர் மன்றத்தினர் ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலம், இனிப்பு ஆகியவற்றை மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் வழங்கினார்.

அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!