செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை
X

செஞ்சியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெரியார் திருவுருவ படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டுஅவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் உட்பட அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கிழக்கு விஜயகுமார், மேல்மலையனூர் கிழக்கு நெடுஞ்செழியன், மேற்கு சுப்பிரமணியன், நகர செயலாளர் காஜா நஜீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!