மேல்மலையனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

மேல்மலையனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
X

மேல்மலையனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுக்கா மேட்டுவைலாமூரில் அரசு சார்பில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்.கே.எஸ்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக திடீர் மழை பெய்ததின் காரணமாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கமடந்தன, இதனால் நெல் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டனர்,

இதனை அறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுக்கா மேட்டுவைலாமூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேக்கமடைந்த நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil