சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி:  அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
X

அவலூர்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அமைச்சர் மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அவலூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சீர்வரிசையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (22.12.2021) வழங்கி, கர்ப்பிணி பெண்களை வாழ்த்தி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் த.மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

பின்னர் அவலூர்பேட்டையில் சுகாதார துறையின் மூலம் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா