கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
X

தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீடுகள்

செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நேரில் ஆறுதல் கூறினார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன்கள் ராமச்சந்திரன், தசரதன் ஆகியோர் அருகிலேயே வசித்து வருகின்றனர்,

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர்களது கூரை வீடுகள் முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவலறிந்த அமைச்சர் மஸ்தான், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக அரசு வழங்கும் தொகுப்பு வீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு