ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் அறிவுரை
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் குறித்த கருத்தரங்கு செஞ்சியில் நடந்தது.
கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், ஊராட்சி பெண் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், நிதியை எவ்வாறு திரட்டுவது, அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கடமை தவறும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள். எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் நல்ல முறையில் செயல்பட வேண்டும். நம்ம வீடு நம்ம ஊரு என நினைத்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் சிறப்பாக செயல்பட்டால் பொதுமக்கள் உங்களை பாராட்டுவார்கள். சிறந்த தலைவராக வர வேண்டுமென்றால் ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருந்தால் முதலமைச்சர் உத்தமர் காந்தி விருது வழங்குவார். என்று கூறினார்
கருத்தரங்கில் மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலாதேவி சேரன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், கண்மணி நெடுஞ்செழியன், தயாளன் சொக்கலிங்கம், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மொக்தியார் மஸ்தான், முருகன், மாவட்ட கவுன்சிலர் அரங்க.ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க தலைவர் அணையேரி ரவி, செயலாளர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன், சிலம்புச் செல்வன், சுப்பிரமணியன், பரிமேலழகன், சிவகாமி மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu