செஞ்சி அருகே ஏரியை நவீனப்படுத்தும் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கம்
செஞ்சி அருகே ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் பி. ஏரி உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணி தொடங்கு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார்.மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி யூனியன் தலைவர் விஜயகுமார், தாசில்தார் நெகருன்னிசா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, மாவட்டவழக்கறிஞர் அணி மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் நெடு ஞ்செழியன், பச்சையப்பன், அண்ணாதுரை பேரூராட்சி துணைத்தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி மற்றும் அனைத்துபேரூரா ட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணி என்பவரை சந்தித்து, அவர் நலன் விசாரித்து, அவருக்கு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu