அமைச்சரானாலும் பழசை மறக்காதவர்
டீக்கடையில் டீ போட்டு அசத்திய அமைச்சர் மஸ்தான்
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரானாவை கட்டுபடுத்த அமைச்சரவையில் கொரோனா கட்டுப்பாடு குறித்தும், அதை தடுப்பது குறித்தும் அமைச்சர்களின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா அதிகமாக உள்ள 14 மாவட்டங்களுக்கு 20 அமைச்சர்களைக் கொண்டு குழு அமைத்து கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் டாக்டர்.க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வந்த அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், திங்கட்கிழமை கொரோனா தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது செஞ்சி பேருந்துநிலையம் எதிரில் உள்ள டீ கடையில் காரை நிறுத்தச் சொன்னார். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் நேராக டீ கடைக்கு சென்று அங்கு தானே டீ போட்டு, மக்களுக்கு வழங்கினார். இதைக் கண்டு கூடிய மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதே போன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அனந்தபுரம் பகுதியில் ஒரு டீ கடையில் திடீரென வாக்காளர்களுக்கு சுவையான டீ வழங்கி அப்போது அசத்தினார், தற்போது அமைச்சரான பின்பும் பந்தா இல்லாமல் எளிமையாக, இந்த அரசியல் பயணத்திற்கு முன் டீ கடை வைத்திருந்ததை நினைவுபடுத்தும் விதமாகவும், பழையதை தாம் என்றும் மறப்பவனில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இது இருந்ததாக அருகில் இருந்தவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
அதன்பிறகு மாவட்டத்தில் கொரானா குறித்து செஞ்சி, உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தார், அப்போது ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணண் உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu