மேல்மலையனூர் கோயிலில் சுகாதார வளாகம் அமைச்சர் ஆய்வு
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணியினை பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வளாகத்தில் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணியினை துவக்கி வைத்ததையொட்டி, இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பணியினை பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வளாகத்தில், இன்று (10.06.2022) இந்து சமய அறநிலையத்துறையின் மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் மூலம் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டடம் கட்டுவதற்கான பணியினை துவக்கி வைத்தார்.
அதனையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பணியினை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, மேல்மலையனூர் ஒன்றிய குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu