உள்ளாட்சித்தேர்தல்: செஞ்சி பகுதியில் அமைச்சர்கள் பிரச்சாரம்

செஞ்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இன்று அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட தென் புதுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜயராகவன், அரங்க ஏழுமலை, முக்தார் அலி முக்தர், அலீம் அத்தான் ஆகியோரை ஆதரித்து அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சினர் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ai marketing future